தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

Multi Knowledge (Android) செயலில் சம்மாந்துறையைச் சேர்ந்தவர் உருவாக்கம்.

உலகம் இன்று தொடர்பாடல் மூலம் சுருங்கி விட்டதாகவும்கிராமமாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நவீன தொடர்பாடல் விருத்தியானது உலகை ஒரு வீடாக மாற்றியுள்ளது. அதாவது உலகில் நடக்கும் சகல நிகழ்ச்சிகளும் வீட்டிலுள்ள அனைவருக்கும் உடனுக்குடன் தெரிந்துவிடும். இந்த அமைப்பே இன்று உலகில் ஏற்பட்டு வருகிறது.

உலகில் எப்பாகத்தில் நிகழும் விடயமானாலும் உடனுக்குடன் தொடர்பாடல் மூலம் இன்று உலகம் முழுவதும் பரவி விடுகிறது. அந்தவகையில் இன்று MBNSOFT நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் Multi Knowledge ஆண்ட்ராய்டு (Android) மென்பொருள்  உலகை ஆளுவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளில் பொது அறிவு, நுண்ணறிவு, பொது உளச்சார்பு, தகவல் தொழில்நுட்பம்,  உயர்தர பொதுச் சாதாரண பரீட்சைக்குரிய கடந்தகால வினாக்கள், வாராந்த தகவல்கள், புதிர்கள் மற்றும் பரிசுகளை அள்ளித்தரும் அறிவுப்போட்டிகள் நிகழ்சிகள் என பல்வேறு சிறப்பம்சங்களோடு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எமது நாட்டில் நடைபெறும் போட்டிப்பரீட்சைகளுக்குரிய வினாக்கைளையும் இலகுவாக பெறமுடிவதுடன் இம்மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் பூரண அறிவைப்பெற்று Grand Master ஆகத்திகழ முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Multi Knowledge 1.2 பதிப்பானது Google Play Store யில் வெளியிடவில்லெயன்றும் இதன் அடுத்த பதிப்பே Play Store க்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் அது மிகவிரைவில் வெளியிடப்படும் எனவும் அதுவரைக்கும் கீழுள்ள இணைப்பின் மூலம் இம்மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யமுடியும் என அந்நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட மென்பொருள் அம்பாறை மாவட்டத்தின்  சம்மாந்துறையைச் சேர்ந்த MB. நஷாட் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் மொழிமூலம் கல்விசார் நடவடிக்கைக்காக தயாரிக்கப்பட்ட எமது நாட்டின் முதலாவது மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன, மத பேதங்களுக்கு அப்பால் நிவாரணங்களை வழங்கிய ஹிஸ்புல்லாஹ்

wpengine

இன்று அமைச்சர் றிஷாட்டிடம் கேள்வி கேளுங்கள்

wpengine

மாவனல்லையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் வன்முறைக்கு இன்று 16 வருடங்கள்.

wpengine