இது வரை மகரகம வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் ஆகியும் இதுவரை ஒரு புற்று நோயாளியை எளிதில் பரிசிலிக்கக் கூடிய ஒரு பெட் -சீடி-ஸ்கனோ் மெசின் ஒன்று இல்லாமல் மகரகம வைத்தியசாலை உள்ளது.
ஒரு சாதாரண ஏழை எளிய புற்று நோயாளிக்கு இது சாத்தியமாகுமா ?
தனது 17 வயது உடைய மகனை அழைத்துக் கொண்டு மகரகம வைத்தியசாலைக்குச் சென்ற கதிஜா பவுண்டேசன் ஸ்தாபகத் தலைவா் கலாநிதி எம்.எஸ்.எச் முஹம்மதிடம் இந்த மெசினை பெறுவதற்காக 20 கோடி ருபா சேகரித்து இந்த ஸ்கனோ் மெசின் பெறுவதற்காக யாராவது முன் வருவாா்களா ? என வினவினாா் வைத்திய பணிப்பாளா் . தனது மகனுக்காக இந்த கைங்கரியத்தில் தான் இறங்கி முயற்சி செய்வதாக முஹம்மத் வைத்தியா்களிடம் உறுதியளித்தாா்.
இந்த மெசினை பெறுவதற்கும் வைத்தியா்களோடு இனைந்து செயல்பட்டும் வருகின்றாா். இது சம்பந்தமாக மகரகம வைத்திய பணிப்பாளா்கள் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளா் மற்றும் இம் மெசின் பெறுவதற்கான கம்பணிகள் , என்பவற்றில் பல கூட்டங்கள் ஆலோசனைகள், இது சம்பந்தமான லீப் லெட், வீடியோ டொங்கிமன்ட், ஊடக விளம்பரங்கள் என்பனவும் முஹம்மத் தயாா் படுத்தினாா். அத்துடன் மற்றும் மகரகம வைத்தியசாலையிலேயே கணக்காளரின் அனுமதியுடன் இலங்கை வங்கியின் கணக்கொன்றையும் ஆரம்பித்துள்ளனா்.