பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு – உயர்தர பரீட்சையின் பின் விபரீத முடிவு

க.பொ.த உயர்தர பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.12.2024) இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற சிறிகேசவன் ஸ்ரெபிகா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவி 30ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

நேற்றைய பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் – தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார். பின்னர் அவரது தந்தை அலுவலாக வெளியே சென்றவேளை குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த! கிராம சேவையாளர் பிரிவுக்கு 3 இராணுவம்

wpengine

வன்னி மாவட்ட பொதுஜன பெரமூன வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து

wpengine

தமிழ் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போய்வுள்ளது.

wpengine