ISIS அமைப்பின் முஸ்லிம் உறுப்பினர் புதுடில்லியில் தங்கியிருந்த போது கைது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்களின் டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று சனக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

புதுடில்லியில் தங்கியிருந்த மோஸின் அஹமட் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அவர், பீஹாரை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், இணையத்தின் ஊடாகவும் களத்திலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்காக செயற்பட்டு வந்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares