பிரதான செய்திகள்விளையாட்டு

IPL இல் ஏலம் இன்றி வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை –விராத் கோலி 33 கோடி, மலிங்க 17 கோடி

IPL போட்டிகளில் ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை இதற்கு முன்னர் இந்திய கிரிகெட் நிர்வாக சபை வெளியிடவில்லை.

என்றாலும் இந்திய கிரிகெட் நிர்வாக சபைக்கு சஷாங் மனோகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த கொள்களையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைகளுக்கு அமைய கூடுதலான தொகை வழங்கப்படும் வீரராக விராத் கோலி காணப்படுகிறார். அவருக்கு ஒரு தொடருக்காக இலங்கை ரூபாய்களுக்கு அமைய 33 கோடி வழங்கப்படுகிறது.

இலங்கை கிரிகெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு ஒரு தொடருக்காக 17 கோடி வழங்கப்படுகிறது.
IPL முன்னணி வீரர்கள் சிலருக்கு வழங்கப்படும் தொகைகள்

01. விராத் கோலி – 33 கோடி
02. சேகர் தவான் – 27.5 கோடி
03. எம்.எஸ். தோணி – 27.5 கோடி
04. ரோஹித் சர்மா – 25.3 கோடி
05. கௌதம் கம்பீர் – 22 கோடி
06. கரன் பொலாட் – 21.3 கோடி
07. AB டி விலியஸ் – 20.9 கோடி
08. கிறிஸ் கெயில் – 18.4 கோடி
09. லசித் மாலிங்க – 17.8 கோடி
10. சுனில் நாராயன் – 17.6 கோடி
11. ரவி அஷ்வின் – 16.5 கோடி
12. டறவன் பிராவோ – 8.8 கோடி
13. ஸ்டீவ் ஸ்மித் – 8.8 கோடி

Related posts

பாலாவி எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரத்த தான முகாம்

wpengine

கருக்கலைப்பை பாவமாக கருதுகின்றோம்-போப் பிரான்சிஸ்

wpengine

அன்பான பெற்றோரின் கவனத்திற்கு..

wpengine