பிரதான செய்திகள்

IMF இன் உதவியை மீண்டும் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!
-அலி சப்ரி-

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை மீண்டும் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மகிழ்ச்சியான விடயம் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும் கடன் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமானால் 2015 மற்றும் 2019 காலப்பகுதியிலும் அதனை செய்திருக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக மாகல்கந்தே சுதந்த தேரர்

wpengine

ஹெரோயின் கடத்தியவருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்!

Editor

சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் தேவை மொட்டுக்கு இல்லை

wpengine