பிரதான செய்திகள்

GCE O/L, A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு 6 மாத கால பயிற்சிநெறி!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த இரண்டு பரீட்சைகளுக்கும் தோற்றிய மாணவர்களின் நலன்கருதி அடுத்த வருடத்திலிருந்து, தொழிற்பயிற்சி, தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆறு மாதகால பயிற்சி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் முதற்கட்டமாக 320 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

Related posts

ஒன்றிணைந்த தொழிற்சங்க ஏற்பாளர் ஆனந்த பாலிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Editor

முசலி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பிரதேச மக்கள் விசனம்

wpengine

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் கல்வியை முன்னேற்றுவதே எனது நோக்கம்- இஷாக் ரஹ்மான்.

wpengine