பிரதான செய்திகள்

EPF-ETF மனு விசாரணையின்றி நிராகரிப்பு!

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் பெற்ற கடனை நீக்குவதை தடுத்து உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தேச தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து பெறப்பட்ட கடன்களை நீக்குவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி அனைத்து நிறுவன ஊழியர் சங்கம், அதன் தலைவர் வசந்த சமரசிங்க அதன் செயலாளர் ஜனக அதிகாரி உள்ளிட்ட 6 பேர் சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகலவால்  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெறிச்சோடி போன வவுனியா பஸ் நிலையம்

wpengine

பெண் இல்லை! ஹக்கீம் நிராகரிப்பு

wpengine

வெளிநாட்டு தூதுவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களில் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை.

Maash