பிரதான செய்திகள்

Emerging Hidayans அமைப்பின் சிறுவர் விளையாட்டு போட்டியும் ஒன்றுகூடலும்.

(மீராவோடை ஸில்மி)
“Beyond the borders” எனும் கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஒரு கிளை அமைப்பான Emerging Hidayans விளையாட்டு கழகத்தின்  2 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இம்முறை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் சிறுவர்களுக்கான ஒன்றுகூடல் மற்றும் விளையாட்டு  நிகழ்வொன்றை வெள்ளி காலை ஏற்பாடு செய்திருந்தது.

சிறுவர்களே நாளைய தலைவர்கள்* ”  எனும் தொனிப்பொருளில் *மாஞ்சோலை பக்ரு கிராமத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஏராளமான சிறுவர்கள் கலந்து கொண்டு சிறந்த விளையாட்டு மற்றும் தலைமைத்துவ பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கழகத்தின் ஸ்தாபக தலைவர் ஸில்மி , கழகத்தின் உப தலைவர் நகீப், பொருளாளர் நுஸ்கி, செயலாளர் அனஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்
முதன்முறையாக அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய அதிகார வர்க்கத்தின் தலையீடு இன்றி முற்று முழுதாக இளைஞர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறியமை பலராலும் பாராட்டப்டடது.

மேலும் இந்நிகழ்வுக்கான பதாகைகள் இலத்திரனியல் அச்சு இயந்திரங்களின் துணையின்றி சிறார்களின் பொற் கரங்களினால் தயாரிக்கப்பட்டமை மற்றுமொரு விஷேட அம்சமாகும்.

இவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

Related posts

அரசியல் மாற்றத்துக்காக சர்வதேச உதவிகளை நாடும் ஜே.வி.பி

wpengine

தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் தற்கொலைப் போராளிகள் ஊடுருவல்! ஞானசார தேரர் தெரிவிப்பு .

Maash

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா

wpengine