பிரபல சமூகசேவையாளர் அல்ஹாஜ் ஜௌபர் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“களுத்துறை, வெளிப்பென்னவை பிறப்பிடமாகக் கொண்ட ஜௌபர் ஹாஜியார், அப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சிக்காக மிக அளப்பரிய பங்காற்றிய ஒருவர். ஆசிரியராக, அதிபராக, ஊர் தலைவராக அவரது சேவைகள் எண்ணிலடங்காதவையாகும்.

பல பள்ளிவாயல்கள், சமூக சேவை அமைப்புக்கள் போன்றவற்றை கட்டியெழுப்புவதிலே தனது வாழ்நாளை அர்ப்பணித்த சிறப்பான ஒரு மனிதர். மாணவர்களுக்கு மார்க்க அறிவை கொடுக்க வேண்டும் என்பதில் அரும்பாடுபட்டவர்.

அனைவரோடு்ம் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடிய சாதுவான குணம் படைத்த அன்னாரின் மறைவு, களுத்துறை பிரதேச மக்களுக்கு பேரிழப்பாகும்.

அன்னாரது இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ், அவருடைய சேவைகளையும் நற்கருமங்களையும் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் உயர்ந்த இடத்தைப் பரிசளிப்பானாக!” என்று தெரிவித்துள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *