2020ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 21856 ஆல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில், 14 லட்சத்து 23 ஆயிரத்து 110 ஆக இருந்த மொத்த அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 14 லட்சத்து ஆயிரத்து 260 ஆக குறைந்துள்ளது.

புதிய பணியிடங்களுக்கான அனுமதியை மட்டுப்படுத்தல், புதிய பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவுகள் ஆகியவைகளால் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கள் வருவாயில் முக்கால்வாசிக்கு மேல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்திற்காக செலவிடப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில், அந்த சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக 794.1 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், அதற்காக செலவிடப்பட்ட தொகை 845.7 பில்லியன் ரூபாயாகும், இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.7 வீத அதிகரிப்பாகும். 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *