காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கை பல்வேறு தரப்புகளிலிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டுப் பங்காளரான பிளக் கெப் மூவ்மண்ட் எனப்படும் கறுப்புத் தொப்பி அமைப்பு இது தொடர்பில் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தது.

அத்துடன் போராட்டக்காரர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் நல்லிணக்கத்துக்கான வழிப்பாதையொன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.

போராட்டக்காரர்களுக்கு பகிரங்க பொதுமன்னிப்பு! ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை | Galleface Protesters Omalpe Sobitha

ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை

இந்நிலையில் மக்கள் மன்றத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான ஓமல்பே சோபித தேரரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கடந்த காலத்தில் போராட்டக்காரர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் பகிரங்க பொதுமன்னிப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு பகிரங்க பொதுமன்னிப்பு! ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை | Galleface Protesters Omalpe Sobitha

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌சவுடன் கலந்துரையாடியுள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கான நேரம் ஒதுக்கிக் கேட்டுள்ளார் என தெரியவருகிறது. 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *