வடமாகாண சபையின் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி, அதன் உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி மாலை, வட மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது. அதில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வடமாகாண சபைக்கான தேர்தல் நிறைவடைந்து, அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.

தற்போது மாகாண சபைக்கு இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு, தற்போதுள்ள அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதுடன், அவைத்தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் பதவிகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *