அனைத்து பல்கலைக்கழகங்களிலுமுள்ள மருத்துவபீட மாணவர்கள் ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்களை அமைத்து தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மருத்துவ பீட மாணவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்பிரகாரம், இராகம, கராபிட்டிய, ரஜரட்ட உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாம் எமது கோரிக்கைகளுக்காக இவ்வாறான பண்டிகை தினங்களிலும் எமது குடும்பங்களை விட்டு பிரிந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக போராடி வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரான லகிரு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தரக்கூடிய அதிகாரிகள் உரிய தீர்வினை இதுவரை எடுக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு அருகில் உள்ள மக்கள் உணவுகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *