மஹியங்கனை, ஒருபெதிவெவ மீவாகல பகுதியில் வாழ்ந்து வருகின்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரு குழந்தைகள் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது பிள்ளைகளுக்கு உரிய முறையில் சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு இக் குழந்தைகளின் பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பெற்றோரின் இரத்த உறவினால் (Harlequin-type ichthyosis) எனப்படும் இவ் அரிய வகை நோயால் குறித்த இரு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.625.0.560.320.160.600.053.800.668.160.90

நோயினால் பீடிக்கப்பட்டுள்ள ஐந்து வயதான பெண் குழந்தை மற்றும் 10 வயதான ஆண் பிள்ளையை காப்பாற்றுவதற்காக தந்தை நாளாந்தம் கூலித் தொழிலுக்கு சென்று வருகின்றார்.

இதேவேளை, நோய்க்கான சிகிச்சைகளை அளிப்பதற்கு அதிகளவான நிதி செலவிடப்படுவதனால், பெற்றோர் கொடையாளிகளின் உதவியை நாடி நிற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *