(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு தெமட்டக் கொட வீதியில் உள்ள  கைரியா பெண்கள் பாடசாலையிற்கு இடம் நெருக்கடி காரணமாக  அப்பாடசாலையில் கற்கும் 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவிகள் பெரிதும் இன்னல்களை எதிா்நோக்கினாா்கள்.

 இதற்காக இப்பாடசாலைக்கு முன் இருந்த தனியாா் காணி ஒன்றை கடந்த 3 வருடங்களுக்கு இப் பாடசாலைக்கு பெற்றுக் கொடுப்பதற்காக  ஆசாத் சாலி முன்வந்து அவா்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  ஊடக தனியாா் காணியை நிதி பெற்று அதனைக் பெற்றுக் கொடுத்தாா்.
அக்  காணியில்  ஸம் ஜெம் றிபாய் ஹாஜியாா்ரை அமைச்சா் பவுசி அழைத்து வந்து இக் கட்டிடத்தினைக் நிர்மாணித்துக் கொடுக்க உதவுமாறு வேண்டினாா் அதன் படி  4 மாடிகளைக் கொண்ட வகுப்பறைகளுக்கு  அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்காக  அவரது சொந்தப் பணத்தினை கோடிக்கணக்கில் செலவிட்டு  இக்கட்டிடத்தினை கடந்த 2 வருடங்களுக்குள் நிர்மாணித்தாா்.SAMSUNG CSC

 நேற்று (11)ஆம் திகதி திங்கற்கிழமை பிற்பகல் 04.30மணிக்கு  றிபாய் ஹாஜியாரினால் இக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கல்லுாாி அதிபா் ஜனாபா நசிரா ஹசனாா் தலைமையில் நடைபெற்றது.  றிபாய் ஹஜியாா் ஏற்கனவே பாத்திமா மகளிா் கல்லுாாிக்கும் ஒரு கட்டிடத்தை நிர்மாணித்துக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.SAMSUNG CSC

இக் கட்டிடத் திறப்பு விழாவில்  அமைச்சா் ஏ.எச்.எம். பவுசி , அமைச்சா் ரவுப் ஹக்கீம், மேல் மாகாண முதலமைசச்சா் இசுரு தேசப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், மேல்மாகாண கல்வியமைச்சா் , மேல்மாகண சபை உறுப்பினர்கள்  நவ்பா் பவுசி, பாயிஸ், பைருஸ் ஹாஜி, அசமாம்டீன், மற்றும் பெற்றோா்கள் ஆசிரியா்களும் கலந்து சிறப்பித்தனா். அத்துடன்  பாடசாலை ஆசிரியா்கள் இம்முறை சிறந்த க.பொ.த. உயா்தரம் சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளுக்கும் பரிசில்கள் நினைவுச் சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

SAMSUNG CSC

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *