ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு கட்சியில் உள்ள பொறுப்புக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். என வலியுறுத்தி கட்சியின் தலைவருக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

இந்த மகஜரில் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களிடம் ஒப்பம் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கட்சியின் தலைமையிலிருந்து சகல அதிகாரிகளும் இந்த மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கட்சியின் தற்போதைய பொறுப்புக்களுக்கு புதிய நபர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அக்குழு கட்சியிடம் வேண்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *