அபுலஹபின் மீது விதியான சாபம் நிலைக்கட்டும்
மதினத்து அன்சாரின்களை மடமையினால் துவம்சம் செய்த
முஆவியாவின் (ரலி) வாரிசு எஸிதும் முன்னவன் போல் ஆகட்டும்.
கர்பலா கொலைக் களத்தைக் கண்ட
எஸிதின் தளபதி யசீதும் சிலுவையேறட்டும்.

பொய்பேசி, புறங்கேட்டு போராளிகள் மீது
பழி தீர்க்கும் இழிநிலையான் ஹக்கீமும் -அவன்
பரம்பரையும்,சந்ததியும் அழியட்டும்.
வாக்குறுதிகளுக்கு கால்கட்டும் ,கடிவாளமும் போடும்
நயவஞ்சகன் நாசத்தை நாடட்டும்.

ஈமான் கொண்ட எங்களுக்குள்

கிழக்கில் ஒரு சிப்பினைத் தோற்றுவிக்க முயலும்
இவன் எண்ணத்தில் மண் விழட்டும்.
அடுத்தவன் அரசு ஊதியத்தை எடுத்தவன்
பரம்பரையில் வந்தவன் இவனன்றோ!

ஆண்டாண்டுகளாய் எம்மை நம்ப வைத்து

மோசம் செய்யும்
நாசக்காறன் ஒழிந்து போகட்டும்.
அதிஸ்டத்தினால் பிர்அவ்னின் பொக்கிஷங்களை
வென்றவன் கொட்டம் அடங்கட்டும்.
அதிகார வெறி கொண்டு மற்றவன் பாத்திரத்தில்
மண்போடும் ஈனன் இல்லாதொழியட்டும்.

இவன் சுடுகாட்டு மாளிகையில்

அடுப்படிப் பூனைகளாய் பிணந்தின்னும்
வெளவால்களின் வாலறுந்து வலுவிழந்து போகட்டும்.
இத்தனையும் நடந்தேறும் நாள்  வரை
யூஸூப்பை (நபி) இழந்த யாகூப் (நபி)யின்
பொறுமையில் நாமும்
இறைவனை இறைஞ்சிடுவோம்.

என்னை அழைக்கும் போது அடியானின்

பிடரி நரம்புக்கு மிக அருகில் இருப்பேன் என்று
எடுத்துரைத்த என் இறைவா
ஒப்புவித்தேன் என் செய்தியினை..

கலாபூஷணம்

கலை இலக்கிய வித்தகர்
மீரா.எஸ்.இஸ்ஸடீன்

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *