(அட்டாளச்சேனை அஸாம்)

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அண்மைக் காலங்களாக மனநோயாளி போன்று அலைந்து திரிகின்றார். அங்கொடை வைத்தியசாலையில் இருந்து தப்பி வந்தவர் போன்று, அவரது செயற்பாடுகள் காணப்படுகின்றன. “றிசாத் பதியுதீன்” என்ற நாமத்தை யாரவது கூறினால், பித்துப் பிடித்தவர் போன்று உளறுகின்றார். கடந்த சில மாதங்களாக றிசாத் பதியுதீனைப் பற்றி ஏதாவது ஒன்றைக் கூறிகொண்டிருக்கின்றார், இந்தப் பைத்தியக்கார ஹரீஸ்.

புதிய அரசாங்கம் கடந்த பொதுத் தேர்தலில் கொண்டுவரவிருந்த புதிய தேர்தல் முறை மாற்றத்தை, தனது தலைவர் ஹக்கீம் தடுத்து நிறுத்தியதாகவும், அதனால்தான் றிசாத் வன்னியில் எம்.பி ஆனார் என்றும்  கேலிக்கூத்தான ஒரு கதையை அம்பாறையில் கூறினார். றிசாத் மீதான காழ்ப்புணர்வு அவரது உச்சந்தலையில் மோசமாக அடித்துவிட்டதனால், முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து றிசாத் பணம் பெற்றதாகக் கூறினார்.

அண்மையில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மத்தியக்குழுக் கூட்டத்தில், தலைவர் ஹக்கீமையும் வைத்துக்கொண்டு, ஹரீஸ் இவ்வாறு கூறினார். “ சம்பந்தனும், றிசாத்தும் டயஸ் போராக்களுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இந்த சதி முயற்சியை முறியடிப்பதற்கு முஸ்லீம் சமூகம் அணிதிரள வேண்டிய காலகட்டம் உருவாகி உள்ளது “ என்று கூறினார்.

அதன் பின்னர் இந்தக் கூட்டத்தில், அவரது உளறல் முடிந்து பேச எழுந்த ஹக்கீம், “ இந்தக் கூட்டத்தில் பிரபலமிக்க, தேர்ச்சிமிக்க ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். ஹரீசின் கூற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தயவுசெய்து ஒரு பதிவாக எடுக்க வேண்டாம். இவ்வாறு கூறினார். சம்பந்தனையும், டயஸ்போராவையும் ஹரீஸ் சுட்டிக்காட்டியதனாலேயே இந்தப் பதிவை மேற்கொள்ள வேண்டாம் என ஹக்கீம் கூறியதாக பின்னர் விளக்கம் கூறப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சாய்ந்தமருது விதாதா வளநிலைய புதிய கட்டிடத் திறப்பு விழாவில்  உரையாற்றிய ஹரீஸ், “ இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் சம்பந்தனும், ஹக்கீமுமே இருப்பார்கள் “ என்ற புதிய புரளியைக் கிளப்பிவிட்டார். “ வாய்க்கொழுப்பு சீலையால் வழிகின்றது “ என்ற கதைக்கொப்ப ஹரீஸ், இவ்வாறு கூறிய அடுத்த நாளே அரசியல் அமைப்பு சபையில் றிசாத் பதியுதீனுக்கும் அரசாங்கத்தினால் அங்கத்துவம் வழங்கப்பட்டு, அவர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டார். இதைக் கேள்வியுற்ற ஹரீஸ் அசடு வழிந்தார். அவரின் ஆதரவாளர்கள் ஹரீசிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.

ஹரீசுக்கு ஒன்று விளங்க வேண்டும். புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் வெளிநாடுகளில் எத்தனயோ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சு வார்த்தைகளில் பெரும்பாலானவற்றில் ஹக்கீம் பங்கேற்ற போதும், முஸ்லிம் சமூகத்துக்கு உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. புலிகளின் தலைவர்களான அன்டன் பாலசிங்கம், கருணா அம்மான், விசு போன்றவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் ஹக்கீமிடம் கேட்ட கேள்விகளுக்கு ஹக்கீம், விடை தெரியாது விழி பிதுங்கி நின்றார். இதுதான் தலைவரின் சாமர்த்தியம்.

ஹரீஸ் இனியும் குருட்டுக் கதைகளைக் கைவிட வேண்டும். கல்முனையைப் பிரதிநித்துவப்படுத்தும் ஹக்கீம், தனது சொந்தப் பிரதேசமான கல்முனைக்கு எதுவுமே செய்யவில்லை. எம்.பியாக, மேயராக இருந்தார். இப்போது பிரதி அமைச்சராக இருக்கின்றார். கேவலம். கல்முனை மாநகருக்குள் அமைந்துள்ள உள்வீதிகளை சென்று பார்த்தால், அவரின் சேவை இலட்சணம் புரியும். கல்முனை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, அல் – ஹாமியா அரபுக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ள தமிழ்ப் பிரதேசத்துக்கு ஹரீஸ் ஒருமுறை சென்று பார்க்க வேண்டும். குன்றும், குழியுமாகக் காணப்படும் அந்த வீதிகளைத் திருத்த முடியாத ஒரு விளையாட்டுப் பிரதி அமைச்சராக அவர் இருக்கின்றார்.

சொந்தக் கிராமத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஹரீஸ், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை பற்றியும், இனப்பிரச்சினைத் தீர்வு பற்றியும் பேசுவதற்கு அவருக்கு நாக் கூசவில்லையா???

 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *