கிறிஸ்தோபர் லீ என்ற காட்டேறி, கட்சிப் போராளிகளின் கழுத்தை முன்னிரு கோரப் பற்களால் கடித்துக் கொதறி ரத்தத்தை உறுஞ்சிக் குடித்து கடவாய் ரெண்டையும் வடிகாலாயமைத்து சவப் பெட்டியில் போட்டு ஆணி அறைகின்றான்.

கோமாளியாகப் பொய் பேசி மக்களை ஏமாழியாக்க காதையும் அறுப்பான்.

ஜனநாயக யுத்தத்தில் போராளிகள் பொறுக்கி எடுத்த கனிமத்துக்களை ஒன்றுவிடாமல் சேர்த்தெடுத்து கூன் முதுகில் சுமந்து செல்லும் சமூகத்தின் நாட்டாமை என்று சொல்வான்.

குருவித் தலையில் பனங்காயை வைத்தது போல் ஒரு பதவி. முஸ்லிம் சமூகத்தின் பொக்கிஷ காவல் கூலியென்பான். பழி தீர்க்கும் இவன் படலத்தின் முகமூடி இப்போ கிழிந்து விட்டது.

காவியுடை தரித்த சில பேரினவாதம் எம்மீது சீறிப் பாயும் போதெல்லாம், பாகிஸ்தானுக்கு  போ, இல்லாட்டி குவைத்துக்குப் போ, எகிப்துக்குப் போ என்று திட்டுவார்கள். உண்மையில் இது ஒரு மனிதாபிமான திட்டல்தான். ஏனென்றால் இனத்தோடு இனத்தைச் சேர்த்து வைக்கின்றார்கள்.

காவிகள் எம்மை ஒரு போதும் மியன்மாருக்குப் போ, காத்மண்டுக்குப் போ, வியட்னாமுக்குப் போ என்று திட்டி கொலைக் கள நாடுகளுக்கு அனுப்பி எம்மை அந்த மண்ணுக்குள் புதைய ஏவவில்லை.

ஆனால் பாருங்கள் என்னருமைப் போராளிகளே!

குளத்தோடு கோபித்துக் கொண்டு குண்டி கழுவாதவன் போல் என்னோடு கோபித்து மொட்டைத் தலைக்கும் – முடங்காளுக்கும் முடிச்சுப் போடுகின்றான். இதிலெதில் இவன் போட்ட முடிச்சு தங்கப் போகிறது?

இவன் கிணற்றடியில் தொழிலுக்கு நின்ற என் மருமகனை அந்த இளங்குடும்பஸ்தனை முப்பனைக்கு அனுப்பியுள்ளான்.

அங்கு முஸ்லிம்களும் இல்லை. காதறுப்பான் போல் சோனகனுமில்லை.

இவரை கல்முனைக்கு அல்லது நிந்தவூருக்கு அல்லது இறக்காமத்து கிணற்றடிக்காலும் அனுப்பி பழிவாங்கவோம் என்று காதறுப்பானின் மனம் எண்ணவில்லை. காவியுடை தரித்த மனிதாபிகளை விடவும் இந்த ஆசாமியின் பழிவாங்கும் வெறி மொனராகலை வரை போயிருக்கு.

இன்று இவன் தயார் சுல்தான், நாளை இவன் என்ன ஆவானோ?

கலாபூஷணம் – கலை, இலக்கிய வித்தகர்

மீரா.எஸ்.இஸ்ஸடீன்

 

 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *