மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்;, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உட்பட பல உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சுமார் ஐயாயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய வகையில் இத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.eastern_08

வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.

இதனடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ஆடைத் தொழிற்சாலையும், ஒரு கைத்தறித் தொழிற்சாலையும் திறந்து வைக்கப்பட்டடதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.eastern_02

இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 3000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர் எனவும் மேலும் தெரிவித்தார்.eastern_01

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *