(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

அமைச்சர் ஹக்கீம் நாளை சனிக்கிழமை அட்டாளைச்சேனையில் ஒரு மிகப் பிரமாண்டமான கூட்டமொன்றை நடாத்துவதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சில நாட்கள் முன்பு சிலரை பணித்ததோடு அவர்களிடம் இந் நிகழ்வில் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.எனினும்,இதனை அறிந்த அனைவரும் அதனை இறுதி வரை இரகசியமாகவே பேணி வந்தனர்.

 

இன்னும் சில நாட்களில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கிடைக்குமெனும் விடயத்தை சிலர் சாட மாடையாக தங்களது முக நூலில் தூவி இருந்தனர்.இதனை முன்னிட்டு மிகப் பிரமாண்டமான பெனர்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.தற்போது கிடைத்த தகவல்களின் படி அமைச்சர் ஹக்கீம் நாளை அக் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என அறிய முடிகிறது.

 

அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனையில் இருவர் தேசியப் பட்டியலைக் குறி வைத்து விடாப் பிடியாக இருப்பதைச் சுட்டிக் காட்டியே குறித்த நிகழ்வைப் புறக்கணிப்பதற்கான காரணத்தைச் சொல்லுகிறாராம்.பொதுவாக அமைச்சர் ஹக்கீம் இருவரை மோதவிட்டு அவர்களின் மோதல்களை காரணம் காட்டி சிலதைச் சாதித்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல.அட்டாளைச்சேனையின் தேசியப் பட்டியல் கனவு இலவு காத்த கிளிக் கதையாகவே உள்ளது.அமைச்சர் ஹக்கீமின் இவ் வருகையை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும் எழுச்சித் தருணம் எனும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புணர்நிர்மாணம் செய்யப்பட்டவற்றை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *