மாபோல வத்தளையில் நடைபாதை ஒன்று அகற்றப்பட்டமை தொடர்பில் சிங்ஹல ராவய           (30-03-2016) ஆம் திகதி  பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை செய்துள்ளது.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவை கைது செய்ய வேண்டும் என்று அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

பொது உடமையான நடைபாதையை அகற்றிய குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்ய வேண்டும் என்று சிங்ஹல ராவயவின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் கோரியுள்ளார்.

நாட்டின் சட்டத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவர் என்று ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எச்சரித்துள்ளார்.

எனவே அந்த அடிப்படையில் அமைச்சர் ஜோன் அமரதுங்க கைது செய்யப்பட வேண்டும் என்று சுதத்த தேரர் கோரியுள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *