(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுவெளிக்கிராமத்தில் இருந்து வரும் எம்.சி.எ.கபூர் வீதி சிலாவத்துறை முருங்கன் பிரதான வீதியுடன் இணைகிறது.

இலந்தைக்குளம், மணக்குளம்,பண்டாரவெளி,மேத்தன்வெளி,அளவக்கைச் சிறுக்குளம் போன்ற கிராமங்களை இணைக்கும் வீதியும் கபூர் வீதியுடன் இணைகிறது.

மேற்சொல்லப்பட்ட கிராம மக்கள் அனைவரும் பயணத்திற்காக இச்சந்தியையே பயன்படுத்துகின்றனர்.

இங்கு வரும் பயணிகள் வெயில்,மழை போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே, இம்மக்களின் நன்மை கருதி ஒரு நிழற்குடையை அமைக்க வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் முசலி பிரதேச மக்களின் ஆதரவை பெற்ற வடமாகாண சபை உறுப்பினர்  றிப்கான் பதியுதீன் ,முசலிப் பிரதேச சபை செயலாளர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *