சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் இன்று வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.DSC05028

பல வருட காலமாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பிரச்சினை தீராத பட்சத்தில் இம்மக்கள் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

 

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு பெற்று தர வேண்டும் என ஆர்ப்பாட்டகார்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *