(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை, கல்லாறு கடற்கரை பகுதியில் இருந்து 51 கிலோ 500 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை, நேற்று வியாழக்கிழமை (24) மாலை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.டபில்யு.ஹெரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர், நேற்று (24) மாலை முசலிப் பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், சிலாபத்துறை கடற்படையுடன் இணைந்து சிலாபத்துறை கல்லாறுப் பகுதிக்குச் சென்ற போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள், 14 பொதிகளில் அடைக்கப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகளைக் கல்லாறு கடற்கரைப் பகுதியில் தூக்கி எறிந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.article_1458883601-DSC_0199

இதன்போது சுமார் 14 பொதிகளில் அடைக்கப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சுமார் 51 கிலோ 500 கிராம் எடை கொண்டது எனவும் சுமார் 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது எனவும் மன்னார் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

இந்த செய்தி தொடர்பில் சிலாவத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரியினை தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கு தெரியாது என்றும். கடற்படை பிரிவினர் தான் இந்த பொதிகனை  கைப்பற்றி இருக்கலாம் என்றும் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *