ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் கட்சி உயர்பீட உறுப்பினர்கள் இருவரை இடைநிறுத்துவதாக கட்சி தலைவர் அறிவித்த நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொருளாளர் கலீல் மவ்லவி மற்றும் மு. கா உலமா காங்கிரஸ் தலைவர் இல்யாஸ் மவ்லவி ஆகியோருக்கு கட்சி தலைமை அதனை  உத்தியோகபூர்மாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கட்சி செயளாலரிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்க கோரி மனு ஒன்றில் கையொப்பமிட்டமைக்காகவே தலைவருக்கு எதிராக சதி செய்ததாக கூறி கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவரையும் தலைமைத்துவம் கட்சியை விட்டு இடைநிறுத்தியதாக குற்றம் சுமத்தினார்கள்.
கட்சி செயளாருக்கு ஆதரவாக உயர்பீட உறுப்பினர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கையொப்பம்
இட்டுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் உயர்பீட உறுப்பினர்கள் பெரும்பான்மையானவர்கள் தலைவரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் இன்னும் சில உறுப்பினர்களை கட்சியை விட்டு இடைநிறுத்தும்
யோசனையை நடைமுறைப்படுத்த முடியாத நிலைக்கு தலைவர் தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து  உள்ளது.

இதன் வெளிப்பாடாகவே தலைவரின் முகநூலில் சில முக்கியஸ்தர்களை வெளியேற்றபோவதாக அவர் தேசிய மாநாட்டில் பேசிய வீடியோ அப்புறப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். அதேவேளை செயளாலரிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க கோரி ஒப்பமிட்ட சில உயர்பீட உறுப்பினர்களிடம் “செயளாலரின் வேண்டுகோளுக்கு இணங்க போதிய தெளிவில்லாமல்” மனுவில் கையொப்பமிட்டதாக சத்திய கடதாசிகளை பெரும் முயற்சியில் தலைமை களமிறங்கியுள்ளதாகவும் குறித்த முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
இன்னும் சில முக்கியஸ்தர்களை இடைநிறுத்துமிடத்து தலைவர் கடும் நெருக்கடிக்கடிகளை சந்திக்க நேரிடும் என குறித்த மு கா முக்கியஸ்தர் சுட்டிக்காட்டினார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *