ரகர் வீரர் வசிம் தாஜுடின் கொலை தொடர்பிலான சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிங்களப் பத்திரிகையொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தாஜூடினின் தொலைபேசி அழைப்பு விபரங்களை, வேறு குற்றவாளி ஒருவரின் பீ அறிக்கையின் ஊடாக பெற்றுக்கொண்டு தாஜூடின் கொலை குறித்த சாட்சியங்களை மூடிமறைக்கவும் அழிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

கொலை இடம்பெற்ற காலத்தில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய தரப்பினர் இவ்வாறு சாட்சியங்களை அழிக்க முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் நீதிமன்றிற்கு கடிதமொன்றின் மூலம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

அண்மையில் இந்த கடிதம் நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தாஜூடின் வழக்கின் ஆவணங்களில் ஒன்றாக இந்த கடிதத்தை கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இந்த கடிதத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார்.

சாட்சியங்களை அழிப்பதற்கு அப்போது கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயற்சித்துள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், பிரதம நீதியரசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதவானுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *