(எஸ்.எம்.எம். வாஜித்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் முலம் கொய்யாவாடி கிராமத்தின் பிரதான வீதி  810 மீட்டர் “காபட்” வீதியாக மாற்றபட்டுள்ளது.

கடந்த காலத்தில் இவ் வீதி கேரவல் பாதையாக குன்றும்,குழியுமாக  காணப்பட்டது என்பது குறிப்பிடக்கது.இதனால் மழை காலத்திலும்,ஏனைய நாட்களிலும்  பாடசாலை மாணவர்கள்,போக்குவரத்து பாதசாரிகள் பல்வேறுபட்ட சிறமங்களை எதிர் நோக்கியதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு இவ் வீதியினை காபட் பாதையாக மாற்ற நிதி ஒதுக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவருக்கு பள்ளி நிர்வாகம்,ஆதரவாளர் மற்றும் நலன் விரும்பிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகின்றனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *