கல்வி ஒன்றே,சமூக முன்னேற்றத்தையும் எழுச்சியையும் தரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் எச்.எம்.எம்.றியாழ் (MBA, CA) வெளியான 2015ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில் சித்தி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திலும் கல்குடாவிலும் க.பொ.த சாதரண பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய தமிழ், முஸ்லிம் மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் பெருமிதமடைகின்றேன் என முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியால் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தையும் எழுச்சியையும் தரும் என்ற அடிப்படையில், இதன் பின்னர் நீங்கள் உயர் தரத்தில் தேர்வு செய்யும் துறைகளூடாக சிறந்ததொரு அடைவைப்பெற்று சமூகத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் நீங்கள் பங்காற்ற வேண்டும்.

உங்களுடைய இந்தப் பெறுபேறுகளை வைத்து உங்களுடைய இலட்சியங்களை ஒரு போதும் நீங்கள் தீர்மானித்து விட முடியாது. இது உங்கள் பதினொரு வருட பாடசாலைக்கல்வியில் ஒரு அடித்தளமே இதன் பிற்பாடு தான் நீங்கள் உங்கள் துறையைத் தீர்மானிக்க வேண்டும். அனைவரும் வைத்தியார்களாவோ, பொறியியலாளர்களாவோ, கணக்கியலாளர்களாவோ, சட்டத்தரணிகளாவோ ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் தான் அனைவரும் தனது துறையைத் தேர்ந்தெடுக்க முற்படுவார்கள். அது தவறென்று நான் சொல்லவில்லை.
ஆனால் எந்தத்துறையில் சென்று நீங்கள் வெற்றி பெற்றாலும், அதனை சமூக மயமான தொழிலாகக் கருதி, சமூகத்திற்காகவும் அர்ப்பணிக்க வேண்டும். அதுவே ஒரு மனிதனின் வாழ்க்கையைத் திடகாத்திரமான வாழ்க்கையாக மாற்றுமென்பதில் எந்தவித ஆட்சேபனமுமில்லை.

அது மட்டுமன்றி, இப்பரீட்சையில் சித்தியைத் தழுவ முடியாத மாணவர்கள் துவண்டு போய், தமது மேற்படிப்பைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் முயற்சி செய்யுங்கள். விடா முயற்சி நிச்சயம் வெற்றியை தரும் எனவும் தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *