தட்சனா மருதமடு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அபிவிருத்தி ஆலோசனை குழு கூட்டத்தில் வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்.

இக்கூட்டம் இளந்தளிர் விளையாட்டுக் கழகத் தலைவர் குலேந்திரன் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தட்சனா மருதமடு கிராம சேவகர் கேதீஸ்வரன் அமைச்சரின் மாடு இணைப்பாளர் சுஜீவன் , தட்சனா மருதமடு இணைப்பாளர் சிவா சம்பு தலைவர் நாகேந்திரன் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது இக் கலந்துரையாடலில் வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப் படுத்தப்பட்ட நிதியிலிருந்து இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தினருக்கு சீருடை வழங்கி
வைக்கப்பட்டது.12494926_197624257278713_7410557968968260731_n

மேலும் வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் உரையாற்றுகையில் தனது
சேவையில் சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதிலும்

இளைஞர்களுக்கான தேவையறிந்து நாம் பரந்த நோக்குடன் சேவை செய்து வருவதாகவும் இளைஞர்களின் வளர்ச்சியிலேயே சமூகத்தின் வளர்ச்சி உள்ளதை யாரும் மறுக்க முடியாது.நாம் இனம் மதம், மொழி, பாராமல் ஒற்றுமையுடன் நாம் ஒரு சமுகம் என செயற்படுவோமானால் நம்மை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாதெனவும் கூறினார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *