இலங்கை மின்சார சபையின் அவசர அழைப்பு, தடங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் செயற்படவில்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் 1987 என்ற புதியதொரு அவசர அழைப்பு இலக்கத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தெஹிவளை மற்றும் கல்கிஸை வாழ் மக்கள், இவ்வாரம் மின்தடை தொடர்பில் விசாரிக்க, 011-4418418 என்ற இலக்கத்துக்கு அழைப்புகளை மேற்கொண்டபோது பதில் கிடைக்காமையால் அவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இயந்திரம் மூலமாக விசாரணைகளுக்கு வழங்கப்பட்ட பதில், அழைத்தவர்களை, தடுக்கி ஆளிளைச் சரிபார்க்கும் படியும் கட்டணங்களைச் செலுத்தி மின்வெட்டப்படுவதைத் தவிர்க்கும் படியும் கூறியது.

இலங்கை மின்சார சபையின் மேல்மாகாணப் பிரிவு பொது முகாமையாளரிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர் அழைப்புகளுக்குப் பதில் கிடைக்கவில்லை எனக் கூறிப்பிடப்பட்டதை மறுத்தார்.

’14 இணைப்புகளில் 03 தொலைபேசி ஊழியர்கள் தான் வேலை செய்கின்றர். எனவே, சகல அழைப்புக்களுக்கும் பதிலளிப்பது சாத்தியமானதல்ல’ என அவர் கூறினார்.

எனினும், இந்த முறைப்பாடுகளைத் தான் கவனத்தில் எடுத்து தொழில் நுட்பக்கோளாறுகள் இல்லாதிருப்பதை உறுதி செய்வதாகக் கூறினார்.

 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *