(வெளிமடை ரிமாஸ்)

புலிகளின் பயங்கரவாதம் வாழ்வையே தொலைத்து நிற்கும் எங்களையும்,  எங்கள் பிரதிநிதியான றிசாத் பதியுதீனையும்  மஞ்சள் பயங்கரவாதம் தொடர்ந்தும் துரத்திக்கொண்டே இருக்கின்றது. 25 வருடங்கலாக அகதி வாழ்விலே நாம் பட்ட கஷ்டங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. தற்போது இனவாத சிந்தனையில், எமது முஸ்லிம் சமூகத்தை கருவறுக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஆட்சியில் பள்ளிவாயல் உடைப்பு, குர்ஆன் நிந்தனை, ஹலால் உணவுப் பிரச்சினை, பர்தா பிரச்சினை ஆகியவற்றால் எமது சமூகம் நொந்து போனது. தற்போது வில்பத்து என்ற போர்வைக்குள் இனவாதிகள் ஒழிந்துகொண்டு அகதி முஸ்லிம் சமூகத்தை பாடாய்ப் படுத்துகின்றனர்.
எமக்காக குரல் கொடுக்கும், எமக்கு உதவி செய்யும், எம்முடன் வாழும்,  எமது பிரதிநிதியான அமைச்சர் றிசாத்தை எவ்வாறாயினும் சிறைக்குள் தள்ள வேண்டுமென்ற முயற்சியில் முடிக்கி விடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இந்த நாட்டை நேசிப்பவர்கள். அந்நியர்களிடமிருந்து  இந்த நாட்டைக் காப்பாற்ற சிங்கள மக்களுடன் இணைந்து போராடியவர்கள்.  எனினும் இன்னும் எம்மை வேற்றுக் கண்ணோடு வந்தான் வருத்தான்களாக  பெரினவாதம் நடத்துகின்றது. முஸ்லிம்களை வேரறுக்க வேண்டுமென்ற  இனவாத சிந்தனை கூர்மையடைந்து வருகின்றது.

 

25 ஆண்டுகளுக்கு முன் புலிகளால் துரத்தப்பட்ட வடபுல மக்களாகிய நாம்,  மீண்டும் எமது சொந்தக் காலில் வாழும் நோக்கில் அகதி முகாமில் இருந்து எமது தாயகத்துக்கு குடியேறச் சென்றோம். எமகு மஹிந்த அரசும் எந்த உதவியும் வழங்கவில்லை. மைத்திரி அரசும் இற்றை வரையில் எந்த உதவியும் வழங்கவில்லை.

எமது மக்கள்  பிரதிநிதியான றிசாத் தனவந்தர்களின், பரோபகாரிகளினதும்  உதவிகளைப் பெற்று எம்மை எமது சொந்த பூமியில் குடியேற்றுவதற்கான  முயற்சிகளில் ஈடுபடுகின்றார். எமது காணியில் வளர்ந்திருந்த மரங்களை நாங்கள் துப்புரவாக்கி கொட்டில்கள் அமைத்த போது அங்கே வந்த இனவாதிகள் அதனைப் பிடுங்கி  எறிந்தனர். அட்டூழியம் செய்தனர். றிசாத் மீதும் அபாண்டமாக பலி சுமத்தினர்.

முஸ்லிம் கொலனி ஒன்று அமைக்கப்படுவதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு பெரிதும் அச்சுறுத்தலான விடயம் என்று கதைகளைக் கட்டி எமது சகோதர சிங்கள மக்களை, எமக்கெதிராக தூண்டிவிட முயற்சித்தனர். சூழலியலாளர்கள் என்ற போர்வையில் இனவாதக் கும்பல்கள் இவர்களுடன் கை கோர்த்து அமைச்சர் றிசாதுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தனர். காடழிப்பு தொடர்பாக அவர்கள் தொடுத்த 06 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருந்த போதும் வழக்கின் போக்கு இனவாதிகளுக்கு சாதகமானதாக இல்லை என்பதை உணர்ந்தனர்.

அடுத்த கட்டமாக இணையத்தளங்கள் முகநூல்கலின் உதவியுடன் அப்பாவி மாணவர்களையும், இளைஞர்களையும் கொழும்புக்கு வரவழைத்து  விஹாரமஹாதேவி பூங்காவுக்கு முன்னால் றிசாத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். அபாண்டங்களை கூறினர். அவதூறுகளை  பரப்பினர்.

மஞ்சள் பயங்கரவாதிகளின் தலைவர்களில் ஒருவர் மிகவும் மோசமாக றிசாத் மீது பல்வேறு அபாண்டங்களை ஊடகங்கள் வாயிலாக கக்கினார். இவரின் விஷக் கருத்துக்கள் சமூகங்களுக்கு இடையே  இனவிரிசலை தோற்றுவிக்கும் என உணர்ந்த அமைச்சர் றிசாத் அவரை பகிரங்க  விவாதம் ஒன்ருக்கு தொலைக்காட்சியில் அழைத்து தக்க பதிலடி கொடுத்தார். அமைச்சர் றிசாத்தின் தெளிவான கருத்துக்களினால் சிங்கள சமூகம் தெளிவு பெற்றது. இனவாதிகள் தமது கொக்கரிப்புக்களை கொஞ்சம்  அடங்கத் தொடங்கினர். எனினும் அவர்களின் இனவாதம் இரத்தத்தில் ஊரியதனால் மீண்டும் காடைத்தனங்களை வெளிக்காட்டத் தொடங்கினர்.

குருநாகல் கலேவெல பகுதிகலில் றிசாத்துக்கு எதிராகவும், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகவும் பல்வேறு  துண்டு பிரசுரங்களை ஒட்டினர். இனவெறியை கக்கி கலவரம் ஒன்றை உருவாக்க முடியும் என அவர்கள்  நினைத்திருந்த போதும் எதுவுமே நடக்கவில்லை. இந்த நிலையிலும் அவர்கள் விட்டபாடில்லை.

நீதிமன்ற அவமதிப்பு காரணமாக  பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் சிறையில் அடைக்கப்பட்டதை காரணம் காட்டி, றிசாத்தையும் சிறையில் அடைக்க வேண்டுமென்று முயற்சிகளை மேற்கொண்டனர். யானைக்குட்டி ஒன்றை வீட்டில் வளர்த்த பௌத்த மதகுரு ஒருவரை பொலீசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திய போது, யானைகளை அழித்த ரிசாத்தையும் கைது செய்ய வேண்டுமென முகநூல்கள் மூலம் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குருநாகலில் றிசாத்தை கைது செய்ய வேண்டுமெனவும் தூக்கிலிட வேண்டுமெனவும் கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்தினர்.

இந்த இனவாதிகளை கடந்த அரசாங்கத்தில் அரவணைத்து போசித்தவர் மஹிந்த ராஜபக்ச. மகிந்தவின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன். நல்லாட்சியை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது மகிந்தவின் இரும்புப் பிடிக்குள் இருந்து தப்பிக்க வழி இல்லாது பலர் தடுமாறி இருந்தபோது அந்தச் சிறையை உடைத்துக்கொண்டு வெளியே வந்து மைத்திரிக்கு கை கொடுத்தவர் றிசாதே.

அவரின் வெளியேற்றம் மகிந்தவின் ஆட்சிக் கதிரையை அசைக்கத் தொடங்கியது. இந்தக் கோபம் மஹிந்தவால் போசிக்கப்பட்ட சேனாக்களுக்கும், பலயாக்களுக்கும் இன்னும் இருக்கின்றது. அதனால்தான் அவர்கள் றிசாதை பழி வாங்கத் துடிக்கின்றனர். அதன் வெளிப்பாடே அண்மையில் ஹையிட் பார்க் திடலில் றிசாத் தொடர்பில் மஹிந்த வெளியிட்ட காழ்ப்புணர்வு கருத்துக்கள். அதுமட்டுமின்றி ஜனாதிபதி மைத்திரி பதவிக்கு வந்த பின்னர், தனது சிம்மாசன உரையில் குறிப்பிடப்பட்ட ஒருசில அரசியல் முக்கியஸ்தர்களின் பெயர்களில் றிசாத்தும் உள்ளடக்கம்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *