உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்கள் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. தினேஷ் சந்திமால் 16 ஓட்டங்களுடனும், டில்ஷான் 12 ஓட்டங்களுடனும் வௌியேறினர்.

பின்னர் அடுத்தடுத்து களமிறங்கியவர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய மெத்தியூஸ் 20 ஓட்டங்களையும், திஸர பெரேரா 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதனையடுத்து, 20 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 122 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 123 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.

அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அன்றி பிளட்சர் (Andre Fletcher) இலங்கை பந்து வீச்சாளர்களை களங்கடித்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்த அவர் 84 ஓட்டங்களை விளாச மேற்கிந்திய தீவுகள் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து, 127 ஓட்டங்களை விளாசியது.

இதற்கமைய 7 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாகை சூடியுள்ளது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *