இத்தாலியின் நகரமொன்றில் வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம்  விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு பொதுமக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இத்தாலியின் Bordighera நகரில் உள்ள ஆதரவற்ற ஆண்களும் பெண்களும் அவர்களின் தேவைகளுக்காக பிச்சை எடுப்பதாக புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த நகரின் தலைவர் Giacomo Pallanca, ஆதரவற்றவர்களுக்கு உதவும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

ஆதரவற்றவர்களை தண்டிக்க முடியாது என கூறும் Pallanca, அவர்களுக்கு உதவுபவர்களை அபராதம் விதிப்பதன் மூலம் தடுக்க முடியும் என்றார்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போலவே இத்தாலியிலும் ஆதரவற்றவர்களுக்கு போதுமான அனைத்து உதவிகளையும் அரசு முன்னெடுத்து வருகின்றது.

பிரித்தானியா போன்ற நாடுகளில் தெருவீதியில் பிச்சை எடுப்பதே சட்டவிரோதமானது என்பதை கடைபிடித்து வருகையில்,

இத்தாலி நாட்டில் அதுபோன்ற எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை இல்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் தேவை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் பிச்சை எடுப்பதற்கு எதிரான அமைப்பினர் இந்த புதிய சட்டத்தினை வரவேற்றுள்ளது மட்டுமின்றி, இது குற்றச்செயல்களை குறைக்க உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல் புரியும் கும்பல்களுக்கு பிச்சை எடுப்பதே அதிக வருவாய் தரும் தொழில் என கூறும் இந்த அமைப்பினர்,

பிச்சை எடுக்கும் சிறார்கள்தான் இதில் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்துள்ளனர். கல்வி, போதிய உணவு மற்றும் சுகாதார பிரச்சனைகளை அவர்களுக்கு அந்த கும்பல்களால் நிராகரிக்கப்படுகிறது என்றனர்.

இத்தாலி நகரின் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை விட பொதுமக்களிடம் இருந்து அதிக ஆதரவே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *