‘பேஸ்புக்’ சமூக வலைதளம், அதன், மென்பொருள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு, நான்கு கோடியே, 84 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது.

கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு மற்றும், ‘பாஸ்வேர்டு’ பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளால், இணையதளங்கள் செயல்படாமல் பாதிக்கப்படுகின்றன. விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் மென்பொருள் தவறுகளால் பெரும் விபத்துகள் கூட ஏற்படுகின்றன.சமூக வலைதளமான பேஸ்புக் தன் மென்பொருள் பயன்பாட்டில் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து, சுட்டிக் காட்டுபவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறது.

இது குறித்து, பேஸ்புக் நிர்வாகி ஆடம் ரூடர்மான் கூறியதாவது: இந்தியாவில், 14.2 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மென்பொருள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் முன்னணியில் உள்ளனர்; அவர்களின் ஆய்வுகள் மிகுந்த பயனளிக்கின்றன. கடந்த, 2011ல் பரிசளிப்பு திட்டம் துவங்கியதில் இருந்து, இதுவரை தவறை கண்டறிந்த, இந்தியர்களுக்கு, 4.84 கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *