மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஹைட் பார்க்கில் நேற்று (17) நடைபெற்ற கூட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

கேள்வி: நேற்றைய கூட்டம் தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா: நேற்றைய கூட்டத்திற்கும் இன்றைய நிகழ்விற்கும் தொடர்புகள் இல்லை. எனினும், குப்பைகூழங்கள் தொடர்பில் இங்கு பேசப்படுவதால் நேற்றைய கூட்டம் தொடர்பிலும் கருத்துக் கூறுவது ஏற்புடையது என நான் நினைகின்றேன்.

கேள்வி: செய்ய முடியாவிட்டால் தம்மிடம் பொறுப்பு வழங்குமாறு சிலர் கூறுகின்றனர் அல்லவா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா: செய்ய முடியாமல் இல்லை. அவர் 9 வருடங்களாக செய்தவற்றை நாம் பார்த்தோம் அல்லவா? அதனாலேயே தான் மக்கள் அவர்களைத் துரத்தினார்கள்.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் இத்தகைய விடயங்களை நீங்கள் எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா: அது தொடர்பில் நாம் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எவ்வித பிரச்சினையும் இல்லை. உத்தியோகப்பூர்வ கட்சியுள்ளது. மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர். சிலர் அர்த்தமற்று குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். திருட்டுக்களை மேற்கொண்டு தற்போது அதனை செய்ய முடியாமையினால் சிரமப்படுகின்றனர். அதனால் அவற்றை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னோக்கிச் செல்லும்.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லையா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா: எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. 1980 ஆம் ஆண்டு சிறிமாவோ அம்மையாரை துரத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த மஹிந்த ராஜபக்ஸ முயற்சித்தார். விரட்டுவதற்காக இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் நேற்றைய கூட்டத்தைப் போன்று கூட்டங்களை நடத்தினார். எனினும், நாம் கட்சியைக் காப்பாற்றி 17 வருடங்களின் பின்னர் அதிகாரத்தைப் பெற்றோம். ஆகவே, இதனை பாரிய பிரச்சினையாகக் கருத முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியிலும் இவ்வாறான பிளவுகள் ஏற்பட்டுள்ளன. எம்மிடையேயும் காணப்படுகின்றது. மக்கள் எம்முடன் உள்ளனர். நாம் முன்னோக்கிப் பயணிப்போம். திருட்டில் ஈடுபட்டவர்கள் இருக்கலாம். நல்லாட்சியில் திருட முடியாது என்பதால் அவருடன் இருப்பார்கள்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *