இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 27,28,29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாட்டின்’ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27 ஆம் திகதிகளில் துபாயில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதயாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்ளவுள்ளதுடன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விசேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்கான அழைப்பிதழ் ‘ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாட்டின்’ உப ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பிரபாத். சீ. உக்குவத்த மற்றும் அதன் ஊடக – சர்வதேச உறவுகளுக்கான இயக்குனர் நிஸாயீர் ஆகியோர் அமைச்சரிடம் வழங்கி வைப்பதையும் அருகில்; மட்டக்களப்பு பல்கலைகழகத்தின்  நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் இருப்பதையும் படத்தில் காணலாம்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *