மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை, முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம் எடை கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து தேடுதலை நடத்தியுள்ளனர்.drug_mannar_03

இதேவேளை, சிலாபத்துறை கடற்படையினரின் உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்போது, சிலாபத்துறை – முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட 60 கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சுமார் 1 கோடி 87 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.drug_mannar_04

எனினும், சந்தேகநபர்கள் என யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், குறித்த 187 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சாப்பொதிகள் விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும், மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *