(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச கோட்ட மட்ட கல்விப் பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்; கலந்து கொண்டார்.
காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள 30 பாடசாலைகள் பங்கேற்ற குறித்த விளையாட்டு விழாவில் 492புள்ளிகளைப் பெற்று காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டதுடன்
276புள்ளிகளைப் பெற்ற காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை இரண்டாவது இடத்தையும் 196 புள்ளிகளைப் பெற்ற காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலயம் மூன்றாவது இடத்தையும்; பெற்றுக் கொண்டது. 4d9f9107-8363-4f04-b72c-512a5b680617
இதன் போது அதிதிகளினால் விளையாட்டு விழாவில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழும் ,பரிசும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் தடைதாண்டல்,மெய்வல்லுனர்,செஸ், அணிநடை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.de05751f-050b-44a7-9dbd-96711bd9f1f8
இவ் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி,பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள கல்விப் பணிப்பாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ,மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விளையாட்டு நிகழ்வில் 400 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 4ம் இடம்பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் நஸீம் பிரதம அதிதியினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.2f703a80-1fd2-44da-adaa-abdc4b46223f

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *