(ஊடகப்பிரிவு-கல்குடா மு.கா இளைஞர் அணி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாத் தொகுதி அரசியல் காரியலயத்திற்கு வருகைதருமாறு ஆதரவாளர்களுக்கு திறந்த அழைப்பிதழ்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 வது தேசிய மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா கிளை முழு நேர சேவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் கணக்கறிஞர் எச்.எம்.றியாழ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 வது தேசிய மாநாட்டை முன்னிட்டு கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை கணக்கறிஞர் எச்.எம்.றியாழ் சென்ற சனியன்று ஆரம்பித்துவைத்துள்ளார்.

இதன் ஓர் அங்கமாக, மீராவோடையில் அமைந்துள்ள கணக்கறிஞர் எச்.எம்.றியாழ் அவர்களின் அரசியல் காரியாலயமானது தேசிய மாநாட்டு ஏற்பாட்டு வேலைகளுக்காக முழு நேரமும் திறந்துள்ளது. 18ம் திகதி வரை முழு நேரமும் திறந்துள்ளதுடன் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளவர்களின் விபரங்கள் திரட்டும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது.

கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தனது அரசியல் காரியலயத்திற்கு வருகைதருமாறு திறந்த அழைப்பொன்றையும்கணக்கறிஞர் எச்.எம்.றியாழ் விடுத்துள்ளார்.

கல்குடாத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கான சாதகமான சூழல் விரைவில் ஏற்படவுள்ளது. எனவே அனைத்து கல்குடாத் தொகுதி வாக்காளர்களும் தன்னுடன் இணைந்து பயணிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *