(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டக் கல்வி பிரிவுக்குட்பட்ட அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் 2016ம் ஆண்டுக்கான சிறுவர் தடகள விளையாட்டு விழா   அண்மையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் அதிபர் எம்.ஏ.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிறுவர் தடகள விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஐ.எம்.இப்றாஹீம்,எஸ்.எம்.வை.கே.நஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.fadbcbf2-880c-4d56-80a7-223d4128e731

இதன் போது அதிதிகளினால் தடகள விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவ,மாணவியர்களுக்கு கிண்ணங்களும்,சான்றிதழும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,மாணவர்களை வழி நடாத்திய அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஆகியோர் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.a00f3f61-4300-4969-9aed-f6aabd29f132

இங்கு அல்-ஹஸனாத் வித்தியால மாணவ,மாணவிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சிகளும், உடற்பயிற்சி போன்ற பல்வேறு தடகள விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

இத் தடகள விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பல்வேறு பாடங்களின் ஆசிரிய ஆலோசகர்கள்,அனுசரணையாளர்கள், ஆசிரிய ஆசிரியர்கள்,மாணவர்கள், அல்-ஹஸனாத் வித்தியால பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள்; ,பாடசாலைகளின் அதிபர்கள்,  அல்-ஹஸனாத் வித்தியாலய பழைய மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் ,ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *