ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக 18 நாட்களான பெண் குழந்தையை 3,530 டாலர்களுக்கு இந்தத் தம்பதியினர் விற்றுள்ளனர்.

சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாய் சியாவோ மேய் என்பவர் நிறைய பகுதி நேர வேலைகளைச் செய்து வருகிறார். தந்தை துவான் எப்போதும் இண்டெர்நெட் கஃபேக்களில் நேரத்தை செலவிட்டு வருபவர்.

சமூகவலைத்தளம் QQ-வில் கொடுத்த விளம்பரத்தை அடுத்து ஒருவர் குழந்தையை வாங்க முன் வந்தார். அவர் 23,000 யுவான்கள் தொகையை இவரிடம் அளித்துள்ளார்.

இந்தத் தொகையைக் கொண்டு ஐபோன் மற்றும் மோட்டார் பைக் ஒன்றை வாங்க அவர் திட்டமிட்டிருந்தார்.

குறித்த தம்பதி 2013-ம் ஆண்டு சந்தித்து காதல் வலையில் விழுந்தனர்.

இவர்கள் இருவருமே திருமண வயதை எட்டாத நிலையில் உறவு மலர்ந்ததில் அந்தப் பெண் கருத்தரித்துள்ளார்.

இதனையடுத்து இந்தக் குழந்தையினால் சுமைதான் அதிகமாகும் என்று இருவரும் முடிவெடுத்து குழந்தையை விற்க தீர்மானித்துள்ளனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *