(அஷ்ரப் ஏ சமத்)

இன்று (8) நீர்விநியோக வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சா் ரவுப் ஹக்கீம் மற்றும் இந்தியத் உயா் ஸ்தாணிகா் வை.கே. சிங்கா முன்னிலையில் இந்தியாவின் எக்ஸ்போட் -இம்போட் வங்கி  இலங்கையின்  மூன்று நீர்விநியோகத்திட்டத்திற்காக  304 மிலிலியன் அமேரிக்க டொலா் கடன்  ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனா்.

இவ் ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸ்போட் – இம்போட் வங்கியின் தலைவா்   யவேந்திரா மதுாா். இலங்கை  நீர்விநியோக வடிகாலமைப்புச் சபையின் தலைவா் கே.ஏ அன்சாா், உப தலைவா் ரஜப்டீன் ஆகியோறும் கைச்சாத்திட்டனர்கள்.

SAMSUNG CSC
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா் ரவுப் ஹக்கீம் –
 அண்மையில் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தின்போது இக் கடன் திட்டத்தினை குறைந்த வட்டியில் வழங்க பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதன் பயணனாக இத்திட்டம் எமக்கு கிடைக்கப்பெற்றது. . இவ் மூன்று திட்டங்களான  குண்டசாலை, ஹரங்கம, 3 இலட்சம் மக்கள் குடி நீர்திட்டத்திற்காக – அமேரிக்க டொலா் 172.13 மில்லியன் , அளுத்கம, மத்துகம, அகலவத்தை 4 இலட்சத்து 50ஆயிரம் மக்கள் குடி நீா்த்திட்டத்திற்காக ,அமேரிக்க டொலா் 194 மிலலியன் மற்றும் அலவுவ, மவாத்தகம, பொத்துகர  108 மில்லியன் –  அமேரிக்க டொலா்  செலவு செய்யப்பட்டவுள்ளன. இவ் மூன்று திட்டங்கள் நிறைவடைந்ததும்   சுமாா் 10 இலட்சத்திற்கும்  மேற்பட்ட  மக்கள்  சுத்தமான குடிநீரை பெற உள்ளனா்.
இந்த திட்டத்திற்காக உதவிய  திரைசேரி, பிரதம மந்திரியின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம்,  மற்றும் ரான்பேரண்ஸ்   அதிகாரிகள்  குறைந்த வட்டியில் கடன் வழங்கும் இந்திய வங்கியின் தலைவா்  இந்திய பிரதமா் மோடிக்கும்   இலங்கை மக்கள் சாா்பாக அமைச்சா் ரவுப் ஹக்கீம்  தமது நன்றியைத்  தெரிவித்தாா்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *