(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சிறுவர்கள் மற்றும் பெண்களுடைய உரிமைகளையும்,பாதுகாப்பையும் உறுதி செய்வதும் அவர்களுக்குப் பொருத்தமான சமூகம் ஒன்றை உருவாக்குவதனை நோக்காக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனையில் பேரில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சுமார் 57 இலட்சம் ரூபா நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ,பொலிஸ் திணைக்களம் என்பவற்றின் மேற்பார்வையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் திறப்பு விழா நேற்று 06 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதர தலைமையில் இடம்பெற்ற மேற்படி பணியகத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான சந்திராணி பண்டார கலந்து கொண்டார்.684d2f0b-03a9-4878-b1f9-047ab6831144

இதன் போது பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவினால் அதன் நினைவுக் கல் திரை நீக்கம் செய்யப்பட்டு,நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி பணியகம் இலங்கையில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் திறந்து வைக்கப்பட்ட 28வது பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் என்பது குறிப்பிடத்தக்கது.9e9bced0-9a6d-43b5-a6d7-cd971fedc2cc

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் நிகழ்ச்சி ஒருங்கமைப்பில் இடம்பெற்ற குறித்த பணியகத் திறப்பு விழாவில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி. ரி.என்.பிரபோதினி,மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,அதன் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சி,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க,8c5c84f6-dc66-4fdf-b1bf-28bfd7c3dcc1

மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ரத்நாயக்கா உட்பட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு,மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பவற்றின் பிரதிநிதிகள்,காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள்,பொது மக்கள் ,பாடசாலை மாணவர்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள்,பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.1856ff4d-ef9d-42b7-8d88-1f23bc7aec16 f1196ad7-378b-41b0-abd4-bd22e6f01d87

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *