ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் LM cable அறிமுகமாகியுள்ளது.

அதிகமான ஆன்ட்ராடு கைப்பேசி பயன்பாட்டாளர்கள் தொலைதூர பயணத்தின்போது அதனை சார்ஜ் செய்வதற்கு USB cable- யினை பயன்படுத்துவார்கள்.

ஆனால், இந்த சார்ஜர் ஐபோன் மற்றும் ஐபேட் பயன்பாட்டாளர்களுக்கு பயன்படாது, இந்நிலையில் இரு கைப்பேசியை பயன்பாட்டாளர்களும் பயன்படுத்தும்விதமாக LMcable சார்ஜர் அறிமுகமாகியுள்ளது.

இந்த ஒரு சார்ஜரில் இரு இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன, ஒரு முனையில் ஐபோன் மற்றும் ஐபேட்டினை சார்ஜ் ஏற்றும் வசதியும் மறுமுனையில் Micro-USB பிரிவும் உள்ளன.

மேலும் இந்த சார்ஜரானது வேகமாக தரவு பரிமாற்றம் செய்வதற்கும், 2.4A வேகத்திலும் சார்ஜ் ஏறுகிறது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *