இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹாவை இந்திய அரசாங்கம் திருப்பியழைக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிடம் விடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

இந்திய இலங்கை எட்கா உடன்படிக்கையை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் ஆட்சேபிப்பது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்ஹா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து இராஜதந்திர வரையறையில் இருந்து விலகி உள்ளுர் அரசியலில் தலையீடு செய்யும் செயற்பாடு என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் காலத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்தமைக்காக திருப்பி அழைக்கப்படவேண்டும் என்று
கோரியிருந்தார்.

இதனையே இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பின்பற்றவேண்டும் என்று கம்மன்பில கோரியுள்ளார்.

இந்தியா, தொடர்ந்தும் இலங்கை விடயத்தில் தலையீடு செய்தால், இந்திய உணவுகளையும் புறக்கணிப்பதுடன் இந்தியாவுக்கு இலங்கையர்கள் செல்வதையும் தடுக்கவேண்டியேற்படும் என்று கம்மன்பில எச்சரித்துள்ளார்

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *