(நாச்சியாதீவு பர்வீன்)
அநுராதபுர  மாவட்ட முஸ்லிம்களின் கல்வியை முன்னேற்றுவதே எனது நோக்கம்,நமது சமூகத்திற்காக எப்போதும் என்றும் குரல் கொடுக்க நான் தயங்கமாட்டேன், எனது மாவட்ட மக்கள் கல்வியிலும்,அபிவிருத்தியிலும் முன்னேற்றுவதே எனது இலக்கு என  அநுராதபுர மாவட்டத்து  பாரளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய முதலாவது கலந்துரையாடல் இன்று கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் நடைபெற்றது,இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்தும் போது

அநுராதபுரத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை 10 வீதம் இருக்கிறோம் ஆனால் வெறுமனே 2.3 வீதமான அரச தொழில் வாய்ப்புக்களே நமக்கு இருக்கிறது,எனவே எமது சமூகத்தின் விகிதாசாரத்திற்க்கு ஏற்ப வளப்பங்கீடுகள்,தொழில் வாய்ப்புக்கள் என்பன விகிதாசாரத்திற்க்கு ஏற்ப கிடைக்க வேண்டும்.அதற்காக நான் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். இந்த மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை நான் அறிவேன் , அனேக பெளதீக வளப்பற்றாக்குறைகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறைகள் அதிகம் காணப்படுகின்றது.இவைகளை நிவர்த்தி செய்யும் கடமை எனக்கு இருக்கிறது. இந்த விடயங்கள் பற்றி மிகுந்த அக்கரையுள்ளவனாக நான் இருப்பேன், என அவர் கூறினார்

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய முதலாவது கலந்துரையாடல் இன்று கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் நடைபெற்றது,இந்த நிகழ்வில் அநுராதபுர மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹ்மான்,டொக்டர் சாபி,மற்றும் ஹொரவப்பொத்தன,மதவாச்சி ,கலன்பிந்துனுவெவ வலயங்களை பிரநிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *