(ரூஸி சனூன்  புத்தளம்)

வில்பத்து தேசிய பூங்காவின் எழுவன்குளம் பிரதேச நுழை வாயில் ஊடாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி திங்கட்கிழமை (29) விஜயம் செய்து அங்குள்ள  குறை நிறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

சுற்றுலா பயணிகளை புத்தளம் மன்னார் வீதி ஊடாக வரவழைத்து எழுவன்குளம் நுழை வாயில் ஊடாக பிரவேசிக்க செய்யும்  பொருட்டு வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் இதற்கென புதிய காரியாலயம்  ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது ஆராய்ந்தார்.IMG-20160222-WA0021-1024x768

இது தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

வில்பத்து பூங்காவிற்கு தெற்கிலிருந்து  வருகை தருபவர்கள் அனுராதபுரம் ஊடாகவே செல்கின்றனர். இதனை எழுவன்குளம்  நுழை வாயில் ஊடாக வரவழைப்பதன் மூலம் அவர்களின் பயணம் இலகுவாக்கப்படுகிறது.

இது தொடர்பாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் \அமைச்சர் ஜயவிக்கிரம பெரேராவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.IMG-20160222-WA0022-1024x768

வில்பத்து தேசிய பூங்கா வடமேல் மாகாணத்துக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது. எனினும்  வடமத்திய மாகாண சபையே இதனை நிர்வகித்து வருகிறது. இது தொடர்பாகவும் பரிசீலிக்க உள்ளோம்.

கல்பிட்டி பிரதேசம் சுற்றுலா பிரதேசமாக அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை படகுகளின் மூலம் கடல் வழி பயணமாக  கங்கை வாடிக்கு வரவழைத்து எழுவன்குளம் நுழைவாயில் ஊடாக பிரவேசிக்க செய்ய உள்ளோம் எனக்கூறினார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *