துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் தெமட்டகொட சமிந்தவை பார்வையிட பொதுபல சேனாவின் செயலாளரான ஞானசார தேரர் வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சென்றுள்ளார்.

இதன்போது தான் சிறையில் காலுக்கு செருப்பு அணியாததைக் கண்ட சமிந்த தனக்கு செருப்பு வாங்கி தந்ததோடு தனக்கு சிறையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்த தந்ததாக தேரர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடந்த புதன்கிழமை வெலிக்கடை சிறைச்சாலை பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலகத் தலைவரான தெமட்டகொட சமிந்த படுகாயமடைந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வைத்தியசாலைக்கு தனது பரிவாரங்களுடன் சென்ற ஞானசார தேரர் சமிந்தைக்கு பிரித் நூலையும் கட்டியுள்ளார்.

அத்துடன் சமிந்த பாதாள உலகத் தலைவரா? குற்றவாளியா? என்ற விடயங்களுக்கு அப்பால் நான் ஒரு மனித நேயமுள்ள பௌத்த துறவி என்ற ரீதியில் அவரை பார்ப்பதற்கு சென்றேன் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *